
+2 விற்கு பின் என்ன படிக்கலாம் – உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

மேல்நிலை இரண்டாமாண்டு பயிலும் மாணவ-மாணவிகள் +2 விற்கு பின் என்ன படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 10/01/2019 அன்று பார்த்திபனூர், அபிராமம், செல்வநாயகபுரம் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள அரசு மேல்நிலை பள்ளி மாணவ-மாணவிகளுக்கும், முதுகுளத்தூர் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் வழங்கப்பட்டது. நம் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் திரு. K. அப்துல் ரஹீம், ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் திரு. M. அபூபக்கர் சித்திக் மற்றும் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் S. நாசர் ஆகியோர் பள்ளி மாணவ- மாணவிகளிடையே உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து பேசினர்.





