
வேலைவாய்ப்பு முகாம்

கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பாக 25/09/2018 அன்று நம் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. TVS, Hero fincorp, ICICI ஆகிய நிறுவனங்களிலிருந்து வெவ்வேறு பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் S. நஷீர் கான் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ஜனாப் N.H. ஜப்பார் அலி, கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி மற்றும் துணைமுதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நம் கல்லூரியில் தற்போது பயிலும் மற்றும் பழைய மாணவ – மாணவிகள் மற்றும் பிற கல்லூரி மாணவ- மாணவிகள் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்.
TVS நிறுவனம் நடத்திய நேர்முகத் தேர்வில் நம் கல்லூரி மாணவ- மாணவிகள் 106 பேரும், பிற கல்லூரி மாணவ – மாணவிகள் 17 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். ICICI வங்கி நடத்திய நேர்முக தேர்வில் நம் கல்லூரி மாணவ-மாணவிகள் 5 பேரும், Hero Fincorp நிறுவனம் நடத்திய நேர்முக தேர்வில் 3 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். TVS நிறுவனம் சார்பாக HR Team திரு. யாசர் மற்றும் பிரசாத் ஆகியோரும், ICICI நிறுவனம் சார்பாக வட்டார துணை மேலாளர், திரு. கோசலைராமன் மற்றும் Hero fincorp நிறுவனம் சார்பாக மண்டல மேலாளர், திரு. கஜேந்திரன் அவர்களும் நேர்முக தேர்வுகளை நடத்தினர்.


