
வேதியியல் துறை மாணவி போட்டியில் வெற்றி.

திருச்சி, ஜமால் முஹம்மது கல்லூரி 13/02/2019 அன்று நடத்திய வேதியியல் விழாவில் (SYMPHORIA) நம் கல்லூரி இரண்டாமாண்டு இளங்கலை வேதியியல் துறை மாணவி P. மதுமிதா, Turncoat பிரிவில் மூன்றாம் இடம் பெற்றார். மேலும் வெவ்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட வேதியியல் துறை சார்ந்த போட்டிகளில் 6 மாணவிகள் கலந்துகொண்டு பாராட்டு சான்றிதழ் பெற்றனர். போட்டியில் மாநில அளவில் 19 கல்லூரிகளை சார்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். வெற்றி பெற்ற மற்றும் பங்குபெற்ற மாணவிகளை கல்லூரி ஆட்சிக்குழு, முதல்வர், துணைமுதல்வர், சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பாராட்டினர்.