
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் நம் கல்லூரி மாணவ-மாணவிகள் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு இளையான்குடியை சேர்ந்த பிரமுகர் ஹாஜி K.H. முஹம்மது உசேன், சிறப்புவிருந்தினர் மற்றும் நம் கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். அருகில் உடற்கல்வி இயக்குனர் முனைவர் S. காளிதாசன், உடற்கல்வி ஆசிரியர் திரு. K.M. காஜா நஜ்முதீன், உடற்கல்வி ஆசிரியைகள் திருமதி. N. வெற்றி மற்றும் செல்வி N. ஐஸ்வர்யா ஆகியோர் உள்ளனர்.
