
மினி மாரத்தான் போட்டியில் நான்காம் இடம்

போதி இன்டர்நேஷனல் பள்ளி, காளையார்கோவில் 14/10/2018 அன்று நடத்திய 21 கிலோமீட்டர் மினி மாரத்தான் போட்டியில் நம் கல்லூரி மாணவர்கள் 9 பேரும், மாணவிகள் 6 பேரும், உடற்கல்வி இயக்குனர் முனைவர் S. காளிதாசன் அவர்களும் கலந்துகொண்டனர். முதலாமாண்டு இளங்கலை பொருளியல் துறை மாணவி செல்வி வினிதா நான்காம் பரிசு பெற்றார். நம் கல்லூரி மாணவ-மாணவிகள் அனைவரும் நிர்ணயித்த நேரத்திற்குள் 21 கிலோமீட்டர் மொத்த தொலைவையும் நிறைவு செய்தனர். கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் திருமதி N. வெற்றி கலந்துகொண்டார். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் சான்றிதழை வழங்கி பாராட்டினார். கல்லூரி ஆட்சிக்குழு, துணைமுதல்வர், சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர், பேராசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் உட்பட மாணவ-மாணவிகள் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற மாணவ-மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் வாழ்த்தினர்.


