
மாவட்ட அளவில் முதலிடம்

தமிழ் வளர்ச்சித் துறை 14/09/2018 அன்று, மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் நடத்திய சிவகங்கை மாவட்ட அளவிலான கவிதை போட்டியில் இளங்கலை தமிழ் இரண்டாமாண்டு மாணவி செல்வி K. விஜயலட்சுமி, முதல் பரிசு ரூ. 10,000 பெற்றார். இப்போட்டியில் 16க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற மாணவிக்கு கல்லூரி ஆட்சிக்குழு, முதல்வர், துணைமுதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். வெற்றி பெற்ற மாணவிக்கு கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் அவர்கள் சிறப்பு ரொக்க பரிசு கொடுத்து வாழ்த்தினார்.
