
மாவட்ட அளவிலான தடகள போட்டியில் இளையான்குடி டாக்டர் சாகிர் ஹுசைன் கல்வியியல் கல்லூரி மாணவிகள் சாதனை

மாவட்ட அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் ஹுசைன் கல்வியியல் கல்லூரி மாணவிகள் பதக்கங்களை வென்றனர்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி கடந்த 28/01/2019 அன்று நடைபெற்றது. இதில் டாக்டர் சாகிர் ஹுசைன் கல்வியியல் கல்லூரி மாணவி செல்வி K. தமிழ்ச்செல்வி தடகள பிரிவில் 100 மீ, 200 மீ ஓட்டப்பந்தய போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார், மேலும் நீளம் தாண்டுதல் பிரிவில் இரண்டாம் இடம் பெற்று மாவட்ட அளவில் தனிநபர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஈட்டி எறிதல் போட்டியில் மாணவி திவ்யா முதல் இடத்தையும், குண்டு எறிதல் போட்டியில் மாணவி சரண்யா இரண்டாம் இடத்தையும் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று தென் மண்டல அளவில் நடைபெறும் தடகள போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றனர். தகுதி பெற்ற மாணவிகளையும், பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குனர் V. கோகுலன் அவர்களையும் கல்லூரி தலைவர், செயலர், பொருளாளர், ஆட்சிக்குழு நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பாராட்டினர்.