
மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா

அனைத்து சமுதாயத்தை சார்ந்த மாணவிகள் பங்கு பெற்ற மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா 12/01/2019 அன்று நடைபெற்றது. கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் தலைமையேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஜனாப் N.H. ஜப்பார் அலி, ஜனாப் J. அபூபக்கர் சித்திக், கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி மற்றும் சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான் ஆகியோர் கலந்துகொண்டு துவங்கிவைத்தனர். துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் கலந்துகொண்டனர். மாணவிகள் சமத்துவ பொங்கலிட்டு மதநல்லிணக்கத்தை போற்றினர்.







