
பளுதூக்கும் (Weight Lifting) போட்டியில் மூன்றாம் பரிசு

21/10/2018 அன்று நடைபெற்ற இராமநாதபுரம் மாவட்ட பளுதூக்கும் போட்டிகள் – 2018 இல் நம் கல்லூரி இரண்டாம் ஆண்டு பொருளியல் துறை மாணவி S. சுபா நந்தினி, 46 கிலோ எடைதூக்கும் பிரிவில் மூன்றாம் பரிசு (பதக்கம் மற்றும் பரிசு கோப்பை) பெற்றார். இப்போட்டியில் மூன்று கல்லூரி உட்பட 5 பள்ளிகள் கலந்துகொண்டது. வெற்றி பெற்ற மாணவியை கல்லூரி ஆட்சிக்குழு, துணைமுதல்வர், சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர், பேராசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சார்பாக கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வாழ்த்தினார். அருகில் பொருளியல் துறை உதவிப் பேராசிரியர்கள் முனைவர் K. மஹேந்திரன் மற்றும் முனைவர் M. மாரிமுத்து.