
பணி நிறைவு விழா

நம் கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து ஓய்வு பெற இருக்கும் அரபுத் துறை தலைவர் திரு. A. அப்துல் ரவூப், வணிகவியல் துறை தலைவர் முனைவர் A. அஸ்ரப் அலி மற்றும் வணிகவியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் S. முஹம்மது ஷரீப் ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு விழா 09/04/2018 அன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி வரவேற்று பேசினார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஜனாப் N.H. ஜப்பார் அலி மற்றும் ஜனாப் J. அபூபக்கர் சித்திக் ஆகியோர், கல்லூரி முன்னாள் பேராசிரியர்கள் திரு. லாரென்ஸ், ஜனாப் சிக்கந்தர், ஜனாப் ஷேக் அப்துல் காதர், ஜனாப் அப்துல் கனி, ஹாஜி முஹம்மது ஜலீல், திரு. மைக்கேல் ஜேம்ஸ் சேகர் மற்றும் முன்னாள் அலுவலக பணியாளர்கள் ஜனாப் ஹிதாயத்துல்லாஹ், ஜனாப் சுல்த்தான் ஆகியோரும், அனைத்து துறைத் தலைவர்கள், அலுவலர்கள் ஆகியோரும் பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களை வாழ்த்தி பேசினர். பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்லூரி செயலர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பொற்காசு அளித்து கௌரவப்படுத்தினர். பணி நிறைவு பெறும் பேராசிரியர்கள் ஏற்புரை வழங்கினர். இறுதியாக முனைவர் A. ஜஹாங்கிர், துணை முதல்வர் நன்றி கூறினார்.











