
பட்டமளிப்பு விழா – 2018

16/09/2018 அன்று ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான், வரவேற்றார், கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி மற்றும் டாக்டர் சாகிர் ஹுசைன் கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜனாப் சிஹாபுதீன் ஆகியோர் கல்லூரி ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தனர். காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ராஜேந்திரன் அவர்கள் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா சிறப்புரையாற்றினார். முனைவர், முதுகலை, இளங்கலை மற்றும் இளங்கலை கல்வியியல் (B.Ed.) ஆகிய பாடப்பிரிவுகளில் பயின்று தேர்ச்சி பெற்ற 140 மாணவர்கள் மற்றும் 559 மாணவிகள் உட்பட 699 பேர் பட்டம் பெற்றனர். கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது ஸுபைர் அவர்கள் விழாவிற்கு தலைமையேற்று விழாவை தொகுத்து வழங்கினார். கல்லூரி ஆட்சிக்குழு பொருளாளர் ஜனாப் S.A.M. அப்துல் அஹது, கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ் A.S. நஷீர் கான், ஜனாப் N.H. ஜப்பார் அலி, ஜனாப் S.A. ரஷீத் அலி, ஜனாப் J. அபூபக்கர் சித்திக் மற்றும் ஜனாப் K.S.H. சிராஜுதீன் ஆகியோர் உட்பட பட்டம் பெற்ற மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.





