
நீர்ப்பிடிப்பு மேலாண்மை மற்றும் விவசாய வளர்ச்சி குறித்த கருத்தரங்கு

பொருளியல் துறை சார்பாக கடந்த 03/02/2019 அன்று “நீர்ப்பிடிப்பு மேலாண்மை மற்றும் விவசாய வளர்ச்சி” குறித்த தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. துறை தலைவர் முனைவர் A. ஜஹாங்கிர் வரவேற்று பேசினார். கல்லூரி ஆட்சிமன்ற குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது ஸுபைர் அவர்கள் தலைமையுரையாற்றினார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான், ஆட்சிக்குழு உறுப்பினர் ஜனாப் J. அபூபக்கர் சித்திக் மற்றும் சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உதவிப் பேராசிரியர் முனைவர் M. மாரிமுத்து சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ள கொச்சின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் பயன்பட்டு பொருளாதாரத் துறை தலைவர் முனைவர் P. அருணாச்சலம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நீர்ப்பிடிப்பு மேலாண்மை மற்றும் விவசாய வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில் மதுரை தியாகராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட 3 கல்லூரிகளை சார்ந்த 90 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இறுதியாக உதவிப் பேராசிரியர் திருமதி S.M. நர்கீஸ் பேகம் நன்றி கூறினார்.

