
நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் (ஆறாம் நாள்)

நாட்டு நலப்பணித் திட்ட ஆறாம் நாள் முகாம் 18/02/2019 அன்று நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் A. அப்ரோஸ் வரவேற்றார். காலை 10.30 மணியளவில் மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது பின்னர் மாணவிகள் ஊர் பொதுமக்களிடம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து வீடு வீடாக சென்று விழிப்புணர்வு வழங்கினர். பிற்பகல் 2.30 மணியளவில் மாணவர்களுக்கு கபடி விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் திரு. R. ஜாஹிர் ஹுசைன், முனைவர் M. பீர் முஹம்மது, திருமதி S.M. நர்கீஸ் பேகம் மற்றும் முனைவர் A. அப்ரோஸ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.





