
நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் (இரண்டாம் நாள்)

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் இரண்டாம் நாளான 14/02/2019 அன்றைய முகாமை சாத்தனி கிராம முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜனாப் A.O. சிராஜுதீன் அவர்கள் துவங்கி வைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திருமதி S.M. நர்கீஸ் பேகம் வரவேற்றார். காலை 10.30 மணி அளவில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. பரமக்குடி, வாசன் ஐ கேர் மருத்துவமனை மேலாளர் திரு. P. முத்துக்குமார் சிறப்புரையாற்றினார். பரமக்குடி, வாசன் ஐ கேர் மருத்துவமனை கண் மருத்துவர் M. வெற்றிச்செல்வி அவர்கள் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஊர் பொது மக்கள் ஆகியோருக்கு கண் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார்.
மதியம் 2 மணியளவில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் M. பீர் முஹம்மது வரவேற்றார். நிகழ்வில் சாலைகிராமம், சுகாதார ஆய்வாளர் திரு. A. பிச்சை மற்றும் இளையான்குடி, சுகாதார ஆய்வாளர் திரு.மனோஜ் பிரபாகர் ஆகியோர் கலந்துகொடு டெங்கு காய்ச்சல் பரவும் முறை மற்றும் தடுப்பு முறை குறித்து பேசினர். இறுதியாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் A. அப்ரோஸ் நன்றி கூறினார்.

