
தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்

சிவங்கை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக 24/01/2019 அன்று கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நம் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வரவேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் வாழ்த்துரை வழங்கினார். சிவகங்கை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் தொழில் திறன் வளர் பயிற்சி அளித்தனர். சிவகங்கை, மாவட்ட ஆட்சி தலைவர் திரு. J. ஜெயகாந்தன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு போட்டித் தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறுவது குறித்தும், சிறுதொழிலின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். மேலும் கண்காட்சியை திறந்து வைத்து, நம் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு நவீன முறையில் பாடங்கள் கற்பிக்கப்படும் முறையை பாராட்டினார். மேலும் “போட்டி தேர்வுகளின் இன்றியமையாமை” என்னும் தலைப்பில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இறுதியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராஜேஸ்வரி நன்றி கூறினார். நிகழ்வில் நம் ஆட்சிக்குழு பொருளாளர் ஜனாப் S.A.M. அப்துல் அஹது, கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஜனாப் N.H. ஜப்பார் அலி, ஜனாப் J. அபூபக்கர் சித்திக் மற்றும் ஜனாப் S.A. ரஷீத் அலி ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.








