
தென்மண்டல அளவிலான விளையாட்டு போட்டி: டாக்டர் சாகிர் ஹுசைன் கல்வியியல் கல்லூரி முதலிடம்

தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் சார்பாக 05/02/2019 அன்று தென்மண்டல அளவிலான கலை போட்டிகள் மதுரை, ஜஸ்டின் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் கடந்த 28/01/2019 அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற நம் டாக்டர் சாகிர் ஹுசைன் கல்வியியல் கல்லூரி மாணவி செல்வி K. தமிழ்ச்செல்வி 100 மீ மற்றும் 200 மீ ஓட்டப்பந்தயத்தில் தென்மண்டல அளவில் முதலிடத்தை பெற்று “தனிநபருக்கான வெற்றியாளர்” என்ற பட்டம் மற்றும் பதக்கத்தினை பெற்றார். மேலும் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளார்.
இப்போட்டியில் நம் டாக்டர் சாகிர் ஹுசைன் கல்வியியல் கல்லூரி மாணவி J. பிரகதி, பேச்சுப்போட்டியிலும், S. அஸின் ஹைரியா கட்டுரைப்போட்டியிலும் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பயிற்சி அளித்த டாக்டர் சாகிர் ஹுசைன் கல்வியியல் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் திருமதி கு. அந்தோணி அம்மாள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் திரு. V. கோகுலன் அவர்களுக்கும் கல்லூரி ஆட்சிமன்ற குழு, முதல்வர் திரு. S. சிஹாபுதீன், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக போட்டி ஒருங்கிணைப்பாளர் திரு. கணேசன் மற்றும் ஜஸ்டின் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் A. மேரி டெல்பின் ஆகியோர் பரிசும், பதக்கமும் வழங்கி பாராட்டினர்.




