
தூய்மை பாரதம் (Swachh Bharat) கோடைகால பயிற்சி முகாம் 2018

தூய்மை இந்தியா (Swachh Bharat) கோடைகால பயிற்சி முகாம் 14/07/2018 மற்றும் 15/07/2018 ஆகிய இரண்டு நாட்கள் சாத்தனி கிராமத்தில் நடைபெற்றது. கல்லூரி தூய்மை பாரதம் திட்ட அதிகாரி முனைவர் K. சுல்த்தான் செய்யது இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் முகாமை துவங்கிவைத்து தலைமையுரையாற்றினார். கல்லூரி துணை முதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர், வாழ்த்துரை வழங்கினார். சாத்தனி கிராமம் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் திரு. சிராஜுதீன் அவர்கள் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தேசிய மாணவர் படை (NCC) மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் (NSS) உட்பட 120 மாணவ-மாணவிகள் சிறப்பு பயிற்சி முகாமில் கலந்துகொண்டு சாத்தனி கிராமத்தை சேர்ந்த மக்களிடம் சுய சுகாதார பேனல், திறந்தவெளி கழிப்பறை பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதார கேடுகள், கை கழுவுதலின் முக்கியத்துவம் மற்றும் திட கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். முகாமை நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரிகள் திரு. R. ஜாஹிர் ஹுசைன் , திருமதி S.M. நர்கீஸ் பேகம், முனைவர் A. அப்ரோஸ் மற்றும் தேசிய மாணவர் படை அதிகாரி திரு. M. அபூபக்கர் சித்திக் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். முகாம் கல்லூரி தூய்மை பாரதம் திட்ட அதிகாரி முனைவர் K. சுல்த்தான் செய்யது இப்ராஹிம் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவடைந்தது.







