“தூய்மையே சேவை – 2018” (Swachhata Hi Seva – 2018)
மஹாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்தநாள் மற்றும் தூய்மை இந்தியா திட்டம் 4வது ஆண்டை முன்னிட்டும் பல்கலைக்கழக மானிய குழு (UGC) அறிவுறுத்தலின் படி 20/09/2018 அன்று “தூய்மையே சேவை – 2018” (Swachhata Hi சேவா (SHS) – 2018) என்னும் நிகழ்வு கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) மற்றும் தேசிய மாணவர் படை (NCC) சார்பாக தத்தெடுப்பு கிராமமாகிய இந்திரா நகரில் நடைபெற்றது. கிராம மக்களுக்கு சுகாதாரம், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் கழிப்பிடம் பயன்படுத்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி கல்லூரியில் துவங்கி இந்திரா நகரில் முடிவுற்றது. பேரணியை கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் துவக்கிவைத்தார். பேரணியில் இந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளும் கலந்துகொண்டனர். கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட (NSS) மற்றும் தேசிய மாணவர் படை (NCC) மாணவர்கள் இந்திரா நகர் பகுதிகளில் தூய்மை பணியை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி A, அழகுமீனாள் மற்றும் திரு. T.N. தம்பிதுரை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. M. கார்த்திகேயன், வட்டார ஒருங்கிணைப்பாளர் திரு. A. சங்கர் ஆகியோரும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி M. சித்ரா மற்றும் உதவித் தலைமை ஆசிரியை திருமதி T, கிருஷ்ணவேணி ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியினை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) மற்றும் தேசிய மாணவர் படை (NCC) அதிகாரிகள் திரு. R. ஜாஹிர் ஹுசைன் மற்றும் திரு. M. அபூபக்கர் சித்திக் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.