
திறன் வளர் போட்டிகள் (மாணவர்கள்) – 2018

மதுரை, மொழி பயிற்சி மையம் மற்றும் இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி இணைந்து 03/07/2018 முதல் மாணவ-மாணவிகளுக்கு ஆங்கிலமொழி பேசும் திறன், ஆளுமைத்திறன் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது. 03/10/2018 அன்று மாணவர்களுக்கு ஆங்கில மொழி பேசும் திறன் அறிதல் போட்டிகள் நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமைதாங்கினார். மாணவர்களுக்கு ஒருநிமிடம் ஆங்கிலத்தில் பேசுதல் (Just a minute), மாறுபட்ட தலைப்புகளில் பேசுதல், மௌனமாக நடித்துக்காட்டுதல் (Mime), ஆங்கில மொழியில் பேசும் பட்டிமன்றம் (Debate), மாதிரிகள் செய்தல், ஆங்கிலத்தில் கதை எழுதுதல் (Story Chain) உள்ளிட்ட பல திறன் வளர் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கான போட்டியில் திரு. நைனாரப்பா என்ற மாணவர் சிறப்பிடம் பெற்றார். சிறந்த துறையாக வேதியியல் துறை தேர்ந்தெடுக்கப்பட்டது. பங்குபெற்ற மற்றும் வெற்றிபெற்ற மாணவர்களை கல்லூரி ஆட்சிக்குழு, முதல்வர், துணைமுதல்வர், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பாராட்டினர்.







