திறன் வளர் போட்டிகள் (மாணவிகள்) – 2018
மதுரை, மொழி பயிற்சி மையம் மற்றும் இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி இணைந்து 03/07/2018 முதல் மாணவ-மாணவிகளுக்கு ஆங்கிலமொழி பேசும் திறன், ஆளுமைத்திறன் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது. 04/10/2018 அன்று மாணவிகளுக்கு ஆங்கில மொழி பேசும் திறன் அறிதல் போட்டிகள் நடத்தப்பட்டது. கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் A.A. முஹம்மது ஸுபைர் அவர்கள் தலைமையேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி, கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவிகளுக்கு ஒருநிமிடம் ஆங்கிலத்தில் பேசுதல் (Just a minute), மாறுபட்ட தலைப்புகளில் பேசுதல், மௌனமாக நடித்துக்காட்டுதல் (Mime), ஆங்கில மொழியில் பேசும் பட்டிமன்றம் (Debate), மாதிரிகள் செய்தல், ஆங்கிலத்தில் கதை எழுதுதல் (Story Chain) உள்ளிட்ட பல திறன் வளர் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக பங்குபெற்ற மாணவிக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. சிறந்த துறையாக கணிதத் துறை தேர்ந்தெடுக்கப்பட்டது. கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ஜனாப் N.H. ஜப்பார் அலி, சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான் உள்ளிட்ட பலர் பங்குபெற்றனர். பங்குபெற்ற மற்றும் வெற்றிபெற்ற மாணவிகளை கல்லூரி ஆட்சிக்குழு, முதல்வர், துணைமுதல்வர், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பாராட்டினர்.