
சர்வதேச மகளிர் தின விழா – 2019

சர்வதேச மகளிர் தின விழா 07/03/2019 அன்று சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஷிபா வரவேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான், தமிழ்த் துறை தலைவர் முனைவர் P. இப்ராஹிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் M. அனிஷா பர்வீன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக அருப்புக்கோட்டை, ஸ்ரீ ஜெயவிலாஸ் சுப்பராஜ் மில்ஸ் நிறுவன, நிர்வாக இயக்குனர் திருமதி V. உமாதேவி அவர்கள் கலந்துகொண்டு மாணவிகளிடம் கலந்துரையாடினார்.
முன்னதாக “நெருப்பில்லா சமையல்” என்னும் தலைப்பில் மாணவிகள் தயாரித்த ஆரோக்கிய உணவுகளில் சிறந்த உணவினை தேர்வு செய்தார். மாணவிகளுக்கு பல்வேறு பிரிவுகளில் சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியாக பொருளியல் துறை உதவிப் பேராசிரியர் திருமதி S.M. நர்கீஸ் பேகம் நன்றி கூறினார். விழாவில் கல்லூரி ஆட்சிமன்ற பொருளாளர் ஜனாப் S.A.M. அப்துல் அஹத், ஆட்சிமன்ற உறுப்பினர்கள் ஜனாப் N.H. ஜப்பார் அலி, ஜனாப் J. அபூபக்கர் சித்திக், கல்லூரி துணைமுதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர், சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் மற்றும் மாணவிகள் பங்குபெற்றனர். இவ்விழாவினை தாவரவியல் துறைத்தலைவர் முனைவர் S. அஸ்மத்து பாத்திமா அவர்கள் தலைமையில் கல்லூரி பெண் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.













