
கை பந்து போட்டியில் வெற்றி

கோவிலூர் நட்சியப்ப ஸ்வாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 22/09/2018 அன்று நடத்திய அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் நம் கல்லூரி மாணவர்கள் கை பந்து போட்டியில் இரண்டாமிடம் (runner up) பெற்றுள்ளனர். மேலும் ஆந்திர பிரதேச மாநிலம் ராயல் சீமா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் பங்கேற்க நம் கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக்கொள்கிறோம். வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்கள் முனைவர் S. காளிதாசன் மற்றும் திரு. K.M. காஜா நஜுமுதீன் ஆகியோர்களை கல்லூரி ஆட்சிக்குழு, முதல்வர், துணைமுதல்வர், சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்தினர்.