கைப்பந்து (Hand Ball) மற்றும் வலைப்பந்து (Tennis) போட்டியில் இரண்டாமிடம்
புதுக்கோட்டை மாவட்ட கைப்பந்து கழகம் 20/10/2018 அன்று நடத்திய மாநில அளவிலான அழைப்பிதழ் கைப்பந்து போட்டியில் நம் கல்லூரி மாணவர்கள் இரண்டாமிடம் (Runner up) பெற்றுள்ளனர். மேலும் நம் கல்லூரி மாணவர்கள் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி 20/10/2018 அன்று நடத்திய அழகப்பா பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளுக்கிடையேயான வலைப்பந்து (Tennis) போட்டியிலும் இரண்டாமிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், உடற்கல்வி இயக்குனர் முனைவர் S. காளிதாசன், உடற்கல்வி ஆசிரியர்கள் திரு. K.M. காஜா நஜ்முதீன் மற்றும் திருமதி N. வெற்றி ஆகியோரை கல்லூரி ஆட்சிக்குழு, முதல்வர், துணைமுதல்வர், சுயநிதிபாடப் பிரிவு இயக்குனர், பேராசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் பாராட்டினர்.