
கால்பந்து விளையாட்டு போட்டி – 2018

அழகப்பா பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்து விளையாட்டு போட்டிகள் நம் கல்லூரியில் இன்று (24/09/2018) தொடங்கியது. கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ஜனாப் N.H. ஜப்பார் அலி மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்களும் விளையாட்டு போட்டிகளை துவங்கிவைத்தனர். அழகப்பா பல்கலைக்கழக இணைவு பெற்ற 18 கல்லூரிகள் விளையாட்டு போட்டியில் பங்குபெறுகின்றனர். விளையாட்டு போட்டியில் 12 ஆடவர் பிரிவுகளிலும், 6 பெண்கள் பிரிவுகளிலும் மாணவ-மாணவிகள் பங்குபெறுகின்றனர். இன்று (24/09/2018) நடைபெற்ற போட்டிகளில் காரைக்குடி, அழகப்பா அரசு கலை கல்லூரி மற்றும் சிவகங்கை அரசு மகளிர் கலைகல்லூரி மாணவிகள் பெண்கள் பிரிவில், நாளை (25/09/2018) நடைபெறுகின்ற இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். விளையாட்டு போட்டிகளை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் S.. காளிதாசன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் திரு. K.M. காஜா நஜ்முதீன், திருமதி N. வெற்றி மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் முனைவர் R. செந்தில் குமரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் முனைவர் S. ஜெயவேல் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்



