
கருத்தரங்கம்

“இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் சமூக சிக்கல்களும் – வெளிநாட்டு வேலைவாய்ப்புகளும்” என்னும் தலைப்பில் கருத்தரங்கம் 23/03/2019 அன்று நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர் வரவேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான், கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி மற்றும் சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தமிழ் துறைத் தலைவர் முனைவர் P. இப்ராஹிம் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக அபுதாபி அய்மான் சங்க பொதுச்செயலாளர் ஜனாப் S.A.C. ஹமீது அவர்களும், சென்னை, இஸ்லாமிய இலக்கிய கழக தலைவர் மற்றும் சென்னை, காயிதேமில்லத் ஆடவர் கல்லூரி மேனாள் முதல்வருமாகிய முனைவர் சே.மு.மு. முஹம்மது அலி அவர்களும் கலந்துகொண்டு மாணவ-மாணவிகள் நேர்முக தேர்வுகளை எதிர்கொள்வது எவ்வாறு என்பது குறித்து பயிற்சி அளித்தனர். மேலும் மாணவ-மாணவிகள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்வதின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனர்.
இறுதியாக வேதியியல் துறை தலைவர் திரு. K.A. செய்யது அபுதாஹிர் நன்றி கூறினார். தமிழ் துறை உதவிப் பேராசிரியர் திரு. K. அப்துல் ரஹீம் தொகுத்து வழங்கினார். கல்லூரி ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் ஜனாப் N.H. ஜப்பார் அலி, ஜனாப் J. அபூபக்கர் சித்திக் உட்பட பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.




