
உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி…

தேசிய தர மதிப்பீடு குழு (NAAC) பரிந்துரைப்படி மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி பயிலுவதால் கிடைக்கப்பெறும் பயன்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி செங்குடி, St. மைக்கேல் மேல்நிலை பள்ளி, சாத்தனுர், அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் சாலையூர், ஹமீதியா மேல்நிலை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 30/01/2019 அன்று நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர், சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான், வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் R. ஜெயமுருகன், உடற்கல்வி இயக்குனர் முனைவர் S. காளிதாசன் மற்றும் கணிதவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் M. ராஷித் முஹம்மது ஆகியோர் உயர்கல்வி பயிலுவதின் முக்கியத்துவம் குறித்து பேசினர். பள்ளிகளில் பயிலும் 130 மாணவ-மாணவிகள் பயன்பெற்றனர்.



