
“இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம்” ஐந்தாம் நாள்

17.05.2019 “இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம் ஐந்தாம் நாள் முகாமில் காலை 9.30 மணியளவில் “கணிதவியலில் அடிப்படைகள்” குறித்து திருவரங்கம், தூய இருதய மேல்நிலை பள்ளி, மூத்த கணித ஆசிரியர் திரு. M. லாசர் அவர்கள் மாணவ-மாணவிகளுக்கு எளிய முறையில் கணிதம் கற்பித்தார். மதியம் அறிவியல் ஆய்வக செய்முறை வகுப்புகள் நடைபெற்றன. இயற்பியல் ஆய்வகத்தில் முனைவர் K.A.Z. செய்யது அபுதாஹிர், வேதியியல் ஆய்வகத்தில் முனைவர் R. ஜெயமுருகன், தாவரவியல் ஆய்வகத்தில் திரு. P. கமல்ராஜ் மற்றும் விலங்கியல் ஆய்வகத்தில் முனைவர் S. ஆபிதீன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.





