
இளம் அறிவியல் விஞ்ஞானி பயிற்சி முகாம்

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் (TNSCST) மற்றும் டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி இணைந்து எதிர்வரும் கோடை விடுமுறை நாட்களில் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு “இளம் அறிவியல் விஞ்ஞானி பயிற்சி முகாம்” (Young Students Scientist Programme (YSSP)) நடத்த உள்ளது. இதற்கான ஆயத்த கருத்தரங்கு சென்னையில் கடந்த 20/02/2019 அன்று நடைபெற்றது. நம் கல்லூரி வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் முகாம் ஒருங்கிணைப்பாளர் முனைவர் R. ஜெயமுருகன் கருத்தரங்கில் கலந்துகொண்டார்.