
இரத்த தான முகாம்

சிவகங்கை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் நம் கல்லூரி ரெட் ரிப்பன் கழகம் (RRC) மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) இணைந்து 28/02/2019 அன்று இரத்த தான முகாமை நடத்தினர். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ஜனாப் N.H. ஜப்பார் அலி அவர்கள் முகாமை துவக்கிவைத்தார். துணை முதல்வர் A. ஜஹாங்கிர், சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான் ஆகியோர் உடனிருந்தனர்.
சிவகங்கை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவர் திருமதி தென்றல், உதவி மருத்துவர் திரு. பால கிருஷ்ணன் மற்றும் இளையான்குடி, அரசு மருத்துவமனை மருத்துவ ஆலோசகர் திரு. சூசைராஜ் ஆகியோர் இரத்த தான முகாமை நடத்தினர். முகாமில் 50 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.
இச் சிறப்பு இரத்த தான முகாமை ஏற்பாடு செய்த ரெட் ரிப்பன் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. K. அப்துல் ரஹீம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு. R. ஜாஹிர் ஹுசைன் ஆகியோரையும், இரத்த தானம் செய்த மாணவ-மாணவிகளையும் கல்லூரி ஆட்சிக்குழு, முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் பாராட்டினர். இரத்த தானம் செய்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

