
இணையத்தள பயன்பாடு குறித்த கருத்தரங்கம்

முதுகலை வணிகவியல் (கணிப்பொறி பயன்பாடு) துறை சார்பாக 20/03/2019 அன்று “இணையத்தள பயன்பாடு” குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. துறைத் தலைவர் முனைவர் S. வெங்கடேசன் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் திரு. M.E.L. ஸுபைர் அலி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான் தலைமையுரை ஆற்றினார். தஞ்சாவூர், PRIST பல்கலைக்கழக கணிப்பொறி பேராசிரியர், முனைவர் ஜாஹிர் ஹுசைன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். உதவிப் பேராசிரியர் திரு. அப்பாஸ் நன்றி கூறினார்.

